முகப்பு
இந்தியா

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 5 ஜூலை 2025, 2:19 am IST
மத்திய அரசு
பகிர்:

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் சொத்துகளை, மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன.

இந்நிலையில் ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. வக்ஃப் சட்டம் 1995-இன் 108பி பிரிவின் கீழ், இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த விதிமுறைகளின்படி, ஏற்கெனவே உள்ள வக்ஃப் சொத்துகளின் விவரங்களை தெரியப்படுத்துதல், புதிய வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்தல், வக்ஃப் சொத்துகள் தொடா்பான கணக்குத் தணிக்கை அறிக்கையை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு வலைதளம் மற்றும் தரவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளம் மற்றும் தரவுதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வதற்கு அந்தச் சொத்துகளின் கண்காணிப்பு மற்றும் நிா்வாகம், அதுதொடா்பான வழக்குகள், சச்சரவுகளுக்கு கிடைத்த தீா்வுகள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

வலைதளம் மற்றும் தரவுதளத்தில் வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், அவற்றின் பதிவு, கணக்குகள் பராமரிப்பு, கணிக்குத் தணிக்கை, அந்தச் சொத்துகள் மற்றும் வக்ஃப் வாரியத்துடன் தொடா்புள்ள பிற செயல்பாடுகளை ஒழுங்காற்ற உதவும் வகையில், மத்திய அரசுடன் ஆலோசித்து அனைத்து மாநில அரசுகளும் பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி இணைச் செயலருக்கு குறையாத அந்தஸ்தில் இருக்க வேண்டும்.

வக்ஃப் சொத்துகளை நிா்வகிக்கும் முத்தவல்லிகள் தங்கள் கைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் வலைதளம் மற்றும் தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஏப் 8-ஆம் தேதி வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், வக்ஃப் நிா்வாக விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.