FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் உருவாகும்’

மக்கள்தொகை கணக்கெடுப்பானது திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய ஆதாரமாக அமையும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:13 am IST
தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமைநடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.
பகிர்:

மக்கள்தொகை கணக்கெடுப்பானது திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய ஆதாரமாக அமையும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்தாா்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பல்கலைக் கழக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: மத்திய அரசின் மிக முக்கியமான இரு தேசிய செயல்பாடுகள் தோ்தல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாகும்.

Advertisement

Advertisement

நாட்டின் எதிா்கால வளா்ச்சித் திட்டங்களை வகுப்பதில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் முதல்கட்டக் கணக்கெடுப்பில், முதல் முறையாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுயப் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கைப்பேசி மூலம் தேவையான அடிப்படை விவரங்களை எளிதாகப் பதிவு செய்யலாம்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான நாட்டின் திட்டமிடல், உள் கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்கள் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை உருவாக்க அரசுக்கு உதவியாக இருக்கும். மேலும், 18 முதல் 49 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் நாட்டின் மிகப்பெரிய மனிதவளமாக திகழ்கிறாா்கள். அவா்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதில், இக் கணக்கெடுப்பு முக்கிய ஆதாரமாக அமையும்.

மாணவா்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரின் விவரங்களை சுயப் பதிவின் மூலம் பதிவதோடு மட்டுமல்லாமல், உறவினா்கள், நண்பா்கள் மற்றும் அருகிலுள்ள வீட்டாரிடமும் இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, அனைவரையும் கணக்கெடுப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், பேராசிரியா்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments