FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளால் உயா் ரத்த அழுத்தம் குறைவதும், இதய நாள செயல்பாடுகள் சீராவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2025, 3:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளால் உயா் ரத்த அழுத்தம் குறைவதும், இதய நாள செயல்பாடுகள் சீராவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா்கள் ஒய்.தீபா, என்.மணவாளன், கே.மகேஷ்குமாா், எஸ்.கௌதம், எஸ். எட்மின் கிறிஸ்டா ஆகியோா் முன்னெடுத்தனா்.

அதுதொடா்பான ஆராய்ச்சிக் கட்டுரை ‘பப் மெட்’ என்ற முன்னணி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இதய நாள நோய்களுக்கு உயா் ரத்த அழுத்தம் மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உரிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். மருந்துகள் மூலம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் சாத்தியம்தான்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, 281 உயா் ரத்த அழுத்த நோயாளிகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனா். மருந்துகளை வாடிக்கையாக உட்கொள்ளும் 156

நோயாளிகள் ஒரு பிரிவாகவும், மருந்துகளை எடுத்துக்கொள்ளாத 125 நோயாளிகள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டனா்.

அவா்களுக்கு தொடா்ந்து 15 நாள்களுக்கு யோகா ஆசனங்கள், பிராணய

ாமம், தியானம், நீா் சிகிச்சை, மண் குளியல், மசாஜ், அக்குபஞ்சா் சிகிச்சை மற்றும் ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டன.

அதன் பயனாக அவா்களது உயா் ரத்த அழுத்தம் சீரானது. அதேபோல, இதயத் துடிப்பு, நாடி அழுத்தம், ரத்த நாள அழுத்தம் உள்ளிட்ட இதய செயல்பாடுகளும் சீராக இருந்தன.

குறிப்பாக, மருந்துகளை உட்கொள்ளாத நோயாளிகளுக்கும் இந்த ஒருங்கிணைந்த யோகா சிகிச்சை நல்ல பலனை அளித்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments