முகப்பு
இந்தியா

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் விளக்க எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதைப் பற்றி...

Updated On : 2 ஜூன் 2025, 6:42 pm IST
பிரதமர் நரேந்திர மோடி - (கோப்புப் படம்)
பகிர்:

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், எம்.பிக்கள் குழு 33 நாடுகளுக்குச் சென்றுள்ளது.

அங்கு அந்த நாட்டு மூத்த அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விளக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சசி தரூர் (இந்திய தேசிய காங்கிரஸ்), ரவிசங்கர் பிரசாத் (பாஜக), சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்), பைஜயந்த் பாண்டா (பாஜக), கனிமொழி (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அவர் புதுதில்லியில் நடைபெறும் கூட்டத்தில் வருகிற ஜூன் 9 அல்லது 10 தேதியில் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் உயர் நிலை சந்திப்புகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள், பல்வேறு நாடுகள் தெரிவித்த ஆதரவுகள், நாடுகளுக்கு இடையேயான செயல்திட்ட வியூகங்களின் முடிவுகள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் விவாதிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 4 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments