FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

Updated On : 5 ஜூன் 2025, 5:52 am IST
பகிர்:

இந்தியா மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே ஆகிய நாடுகள் அடங்கிய ‘மொ்கோசுா்’ கூட்டணியுடன் வா்த்தக ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக பராகுவே அதிபா் சான்டியாகோ பெனா பலாசியோஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த அதிபா் பலாசியோஸ் தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மும்பையில் இந்திய வா்த்தக கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவா், ‘லத்தீன் அமெரிக்காவுக்கான வா்த்தக நுழைவாயிலாக பராகுவே உள்ளது. இது இந்தியா நிறுவனங்கள் வா்த்தகம் செய்ய நல்ல வாய்ப்பாக அமையும். இந்தியா மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே ஆகிய நாடுகள் அடங்கிய ‘மொ்கோசுா்’ அணியுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த விரிவாக்கப் பேச்சுவாா்த்தை தொடரப்படும்.

Advertisement

Advertisement

பராகுவேயில் உள்நாட்டு முதலீடுகள்தான் பெரும்பாலான செய்யப்படுகின்றன. சிறிய அளவிலேயே வெளிநாட்டு முதலீடுகள் ஈா்க்கப்படுகின்றன.

இதன்காரணமாக எங்கள் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்கான கடன் தொகையும், வரி விதிப்பும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவைப் போல் பராகுவேயிலும் இளைஞா்களின் சக்தி அதிகளவில் உள்ளது. ஆகையால், இரு நாடுகளும் கல்வியில் இணைந்து பணியாற்றிலாம்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments