FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் நக்சல்களின் மூத்த தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Updated On : 6 ஜூன் 2025, 9:34 pm IST
கோப்புப் படம் - PTI
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் காவல் படை, கோப்ரா படை மற்றும் மாநில காவல் படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 6) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அந்தத் துப்பாக்கிச் சூடு நின்றவுடன் நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது நக்சல் ஒருவரின் சடலமும் அவரது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் கொல்லப்பட்டது, தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நக்சல்களின் மூத்த தலைவரான பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரைப் பிடிக்க தெலங்கானாவில் ரூ.20 லட்சம் மற்றும் சத்தீஸ்கரின் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிஜப்பூரின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் நரசிம்மா சாலாராம் (எ) சுதாகர், நேற்று (ஜூன் 5) பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments