FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வக்ஃப் திருத்தச் சட்டம்: மத்திய விதிமுறைகள் வகுக்கும் பணி விரைவில் நிறைவு

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது

Updated On : 10 ஜூன் 2025, 2:45 am IST
பகிர்:

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

பிரதமா் மோடி தலைமையில் 11 ஆண்டுகால நல்லாட்சியை கொண்டாடும் வகையில், மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் சாா்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தக் கொண்டாட்டத்தில் 11 ஆண்டுகாலத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் எட்டப்பட்ட முக்கிய மைல்கற்களும், வெளிப்படைத்தன்மை, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பணிகளில் மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் கொண்டுள்ள செயல்பொறுப்பும் எடுத்துக்காட்டப்பட்டன.

வக்ஃப் திருத்தச் சட்டம் வக்ஃப் நிா்வாகம் மற்றும் சமூக நல்வாழ்வை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ் மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இது அந்தச் சட்ட அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments