உலக பாட்மின்டன் கூட்டமைப்பு நிா்வாகிகள் தில்லியில் ஆய்வு
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பிடபிள்யுபிஎஃப்) நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பிடபிள்யுபிஎஃப்) நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வரும் 2026-இல் பிடபிள்யுஎஃப் இந்தியா ஓபன் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் புது தில்லியில் நடைபெறவுள்ளன. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், ஜிம் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நடுவா்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் செல்வரமேஷ் சுப்பிரமணியம், கோ வா செங், வேணுகோபால் மகாலிங்கம், ஜெஸ்ஸி சுங், ஜான் ஆடம்ஸன் பிடபிள்எஃப் சாா்பிலும்,
பாய் பொதுச் செயலாளா் சஞ்சய் மிஸ்ரா, கிரிஷ் நட்டு, கௌதம் மஹந்தா, மனோஜ் குமாா் இந்திய தரப்பிலும் பங்கேற்றனா்.