ஏர் இந்தியா விமான விபத்தில் 130 உடல்கள் மீட்பு?
ஏர் இந்தியா விமான விபத்தில் 130 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 50 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுவரை 130 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் 53 பிரிட்டன் நாட்டவர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால், அங்கிருந்த கட்டடங்களிலும் தீப்பற்றி எரிந்தது.
Advertisement
Advertisement
இதுவரை விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 130 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?
விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகவும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட விமானத்திலிருந்து 1.39 மணிக்கு அவசரஅழைப்பு வந்த நிலையில், அது துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.