இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வெளிநாடு எது?
இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் வெளிநாடுகள் குறித்த பட்டியல்...
இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் வெளிநாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
பல்வேறு காலநிலை மாற்றங்களையும் உயரிய கலாசார பண்பாட்டையும் கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவைக் காண பல்வேறு வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணம் மேற்கொள்வது வாடிக்கையானது.
ஆங்கிலேயர்கள் காலம் முதலே இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
உள்நாட்டிலேயே சுற்றிப் பார்க்க பல்வேறு வரலாற்று இடங்களும், பாரம்பரிய தலங்களும், இயற்கை வளங்களும் இருக்கும் நிலையில் இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வெளிநாடுகள் என்னென்ன என்பதைக் காணலாம்.
இப்பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 72 லட்சம் பயணிகள் (இந்தியர்கள்) பயணிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக செளதி அரேபியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 31 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
3வது இடத்தில் அமெரிக்காவும் (21 லட்சம்), 4வது இடத்தில் தாய்லாந்து (15 லட்சம் பேர்), 5வது இடத்தில் சிங்கப்பூர் (14 லட்சம் பேர்) உள்ளது.
இதையும் படிக்க | கரோனாவுக்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக சரிவு கண்ட நாடுகள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.