FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு

Updated On : 18 மே 2025, 10:58 am IST
பகிர்:

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சிறந்த பங்காற்றியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 16 மற்றும் 17-வது மக்களவையில் சிறந்த பங்காற்றியதற்காக பருத்ஹரி மஹ்தாப் (பிஜு ஜனதா தளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்), என்.கே.பிரேமச்சந்திரன் (சமூகப் புரட்சிக் கட்சி), ஸ்ரீரங் அப்பா பர்னே (சிவசேனை) ஆகியோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை - உத்தவ் தாக்கரே), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனை), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), பித்யூத் பரன் மஹாதோ (பாஜக), பி.பி.சௌத்ரி (பாஜக), மதன் ராத்தோர் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக), திலீப் சைக்கியா (பாஜக) ஆகியோருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

மேலும், இரு நிரந்தரக் குழுக்களான நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும் சிறந்த செயல்திறனுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments