FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சண்டீகரில் கரோனாவுக்கு ஒருவர் பலி!

சண்டீகரில் கரோனா பாதிப்பினால் ஒருவர் பலியாகியுள்ளார்.

Updated On : 28 மே 2025, 3:42 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சண்டீகரில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோஸாபாத் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கரோனா பாதிப்பினால், பஞ்சாப்பின் லூதியானாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று (மே 28) சிகிச்சைப் பலனின்றி பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு, தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றான ஜே.என்.1-ன் பாதிப்பு ஏற்பட்டிருந்ததா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

இதுவே, சண்டீகரில் பதிவான முதல் பாதிப்பென்று கூறப்படும் நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் தற்போது கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக படுக்கைகளுடன் கூடிய தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஹரியாணாவைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் கரோனா பாதிப்பினால் மொஹாலியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், ஹரியாணாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி சிங் ராவ், அம்மாநிலத்தில் 4 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பயிர்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments