உமர், செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து காரில் வெளியேறும் உமர் படம்: எக்ஸ்
இந்தியா

தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை உருவாக்கினாரா உமர்? தகவல்கள்!

தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை உருவாக்கினாரா உமர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி செங்கோட்டை அருகே வாகன நிறுத்துமிடத்தில் மூன்று மணி நேரம், காரை விட்டு வெளியே வரலாமல், உமர் உன் நபி என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபரிதாபாத்திலிருந்து காரில் வெடிபொருள்களுடன் வந்த உமர் நபி, தில்லியின் பல்வேறு பகுதிகளையும் நோட்டம் விட்டுள்ளார்.

அதிகம் கூட்டம் சேரும் இடமாகத் தேர்வு செய்ய சில இடங்களில் காருக்குள் காத்திருந்திருக்கலாம் என்றும் அவரது கார் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தில்லி செங்கோட்டை அருகே, மெட்ரோ நுழைவு வாயில் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 3 மணி நேரம் காருக்குள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உமர் முகமது என்கிற உமர் உன் நபி, காருக்குள் இருந்து வெடிபொருள்களைக் கொண்டு வெடிகுண்டை உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணை அமைப்பினருக்கு வலுத்துள்ளது.

தில்லிக்குள் உமர் நுழைந்த பிறகு, அவரை வழிநடத்துபவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளதும், முதலில் இவர்களுக்குள் நடந்த உரையாடல் தாக்குதல் நடத்தும் இடம் குறித்து இருந்துள்ளது.

பிறகு, தில்லி செங்கோட்டை அருகே வாகனத்தை நிறுத்தியபோது, அது நினைவுச் சின்னமாக இருப்பதையும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை வைத்தே அவ்விடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அன்று திங்கள்கிழமை என்பதால், செங்கோட்டைக்குள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்பதால், வாகன நிறுத்துமிடங்கள் எல்லாம் காலியாக இருந்துள்ளது. அது பற்றி அவர்கள் அறிந்திருக்காமல் இருக்கலாம், அதனால் அவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் நடத்த இருந்த தாக்குதல் கைவிடப்பட்டிருக்கலாம், எனவேதான், சதியாளர்கள், ஒரு பக்கம் செங்கோட்டை, மற்றொரு பக்கம் சாந்திரி சௌக் பகுதியை தேர்வு செய்திருக்கலாம் என்று தற்போதைய விசாரணையில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் புதியதாக 2 இந்தியத் தூதரகங்கள் திறப்பு!

தனுஷ் விவகாரம்... விளக்கமளித்த நடிகை மன்யா ஆனந்த்!

ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 272 பேர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

பிங்க் பியூட்டி... ரேஷ்மா பசுபுலேட்டி!

உங்களுக்கு எத்தனை புருஷன்? கமருதீனால் ஆத்திரமடைந்த விஜே பார்வதி!

SCROLL FOR NEXT