FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உமர் காலித் வாரத்திற்கு இருமுறை குடும்பத்தினருடன் பேசலாம்: தில்லி நீதிமன்றம் அதிரடி!

தில்லி கலவரம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித் பற்றி..

Updated On : 15 ஜூலை 2026, 4:48 pm IST
உமர் காலித்
பகிர்:

தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது குடும்பத்தினருடன் வாரத்திற்கு இருமுறை காணொலி வாயிலாகப் பேசத் தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான சதி வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் உமர் காலித் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிறை விதிகளை மீறாமல் உமர் காலித் இந்த வசதியைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதைக் கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

மனுதாரர் கடந்த ஆறு ஆண்டுகளாக வாரத்திற்கு இரு முறை காணொலி வாயிலாகப் பேசும் வசதியைப் பயன்படுத்தி வந்துள்ளதாலும், ஆனால் சிறை விதிகளை அவர் மீறாத நிலையிலும் எந்தக் காரணமும் இன்றி அந்த வசதி வாரத்திற்கு ஒரு முறையாகக் குறைக்கப்பட்டதாகவும் காலித்தின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, உமர் காலித் வாரத்திற்கு இருமுறை காணொலி வாயிலாகப் பேசத் தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

A Delhi court has allowed jailed activist Umar Khalid to have two video meetings (e-mulakats) with his family every week after his counsel claimed it was reduced to one from May 2026 without any reason.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments