அஸ்ஸாம் முதல்வருக்கு மாஃபியாவுடன் தொடர்பு: கௌரவ் கோகோய் குற்றச்சாட்டு!
மாஃபியாவுடன் தொடர்புள்ளவர்களை விரும்பும் முதல்வர்...
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மாஃபியாக்களுடன் தொடர்புடையவர் என அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவரும், ஜோர்ஹாட் தொகுதியின் வேட்பாளருமான கௌரவ் கோகோய் விமசித்துள்ளார்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கர்பி ஆங்லாங்கில் செய்தியாளர்களிடம் கௌரவ் கோகோய் பேசினார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீது நம்பிக்கை தெரிவித்தார். ஊழல், அச்சம் மற்றும் மிரட்டல் அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த அஸ்ஸாம் மக்களும் ஒன்றுபட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
Advertisement
Advertisement
சட்டவிரோத நடவடிக்கைகளிலும், மாஃபியா கும்பல்களிலும் ஈடுபட்டுள்ளவர்களை அஸ்ஸாம் மக்கள் இனி தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கல், நிலக்கரி மற்றும் மாஃபியாக்களுடன் தொடர்புள்ளவர்களை மட்டுமே ஹிமந்த பிஸ்வ சர்மா விரும்புகிறார். அவரது சொந்தக் கட்சியிலேயே கூட, மக்களுக்குச் சேவை செய்யும் தலைவர்கள் அவருடன் நீடிப்பதில்லை. அத்தகைய தலைவர்களின் தேர்தல் வாய்ப்புகளை அவர் ரத்து செய்துவிடுகிறார்.
மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் சட்டப்பேரவையைக் கைப்பற்றுவதற்காக, தற்போது ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, அஸ்ஸாம் ஜாதிய பரிஷத், ரைஜோர் தளம், சிபிஎம், சிபிஎம்எல் மற்றும் அனைத்துக் கட்சி மலைவாழ் மக்கள் தலைவர்கள் மாநாடு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
முன்னதாக இன்று கர்பி ஆங்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் விவசாயம், எரிசக்தி மற்றும் தரவு சார்ந்த உரிமைகளை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிடம் தாரை வார்த்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிப்பதாகவும், அதே வேளையில் இந்திய விவசாயிகள், சிறு வணிகங்கள் மற்றும் தொழில்துறையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்தியாவின் முக்கியத் துறைகள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Assam Congress president and candidate from Jorhat constituency in the upcoming assembly polls, Gaurav Gogoi, on Thursday hit out at Chief Minister Himanta Biswa Sarma, alleging his links with the stone, coal and areca nut mafia in the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.