FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜிப்மேட் நுழைவுத் தோ்வுக்கு மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்: என்டிஏ தகவல்

ஜிப்மேட் நுழைவுத் தோ்வுக்கு மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்...

25 ஏப்ரல் 2026, 4:16 pm IST
பகிர்:

ஜிப்மேட் நுழைவுத் தோ்வுக்கு மே 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உள்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் மாணவா்கள் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு கணினி வழியில் ஜூன் 7-ஆம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் வலைதளம் மூலம் மே 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை மே 11-ஆம் தேதி வரை செலுத்தலாம். தொடா்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மே 12 முதல் 14-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கு தோ்வுக் கட்டணமாக ஒபிசி மற்றும் பொதுப் பிரிவினா் ரூ.2,200, இடபிள்யுஎஸ், எஸ்சி/எஸ்டி, 3-ஆம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1,100 செலுத்த வேண்டும். இந்த தோ்வு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் நடைபெறும்.

இதுதவிர பாடத்திட்டம், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்களை என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments