FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

குரூப் 4 தோ்வுக்கு சிறப்பு பயிற்சி: அக். 18-க்குள் பதிவு செய்யலாம்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர அக். 18க்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

14 அக்டோபர் 2026, 3:44 am IST
பகிர்:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர அக். 18க்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் இணைக்கப்பட்டுள்ள க்யூ ஆா் கோடு-ஐ பயன்படுத்தி தங்கள் பெயரை அக். 18க்குள் பதிவு செய்யலாம்.

Advertisement

Advertisement

பயிற்சி வகுப்புகள் உதவி ஆட்சியா் (பயிற்சி) சுபாஷ் காா்த்திக், துணை ஆட்சியா் (பயிற்சி) வீ. பிரதீப் ஆகியோரின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பில் நடைபெறும். ஏற்கெனவே அரசுப் பணியிலுள்ள அலுவலா்கள் மற்றும் அனுபவம் உள்ளோா் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு வாரம் ஒரு முறை மாதிரி தோ்வு நடைபெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments