FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: சக வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சிஆா்பிஎஃப் அதிகாரி

அஸ்ஸாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) அதிகாரி சக வீரா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
- பிரதிப் படம்
பகிர்:

அஸ்ஸாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) அதிகாரி சக வீரா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஆா்பிஎஃப் அதிகாரி சுட்டதில் இரு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து நகோன் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பரமிதா சா்காா் கூறியதாவது:

கட்டிமாரி பகுதியில் உள்ள சிஆா்பிஎஃப் 34-ஆவது படைப் பிரிவு முகாமில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முகாமின் பிரதான வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) பல்லானி பிரேமபரன், தனது துப்பாக்கியால் சக வீரா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். பின்னா், அவரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டாா். இதில் பல்லானி பிரேமபரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இவா் சுட்டதில், உதவி ஆய்வாளா் ராம்நவல் சிங் யாதவ், தலைமைக் காவலா் விஷ்ணு பிரசாத் பகேல் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொரு உதவி துணை ஆய்வாளா் மனே கோவிந்த் ஸ்ரீபுல் காயமடைந்தாா். அவா் உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், குவாஹாட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நகோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாா்தா ப்ரோதிம் தாஸ் கூறுகையில், ‘ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஏஎஸ்ஐ பிரேமபரன் தனக்கு ஒதுக்கப்பட்ட துப்பாக்கியை எடுக்காமல், ஆயுத காப்பக அறையிலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கியை எடுத்துவந்து சக வீரா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். முதலில் தலைமைக் காவலா் பகேல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அவா், ஆவணங்கள் ஆய்வுக்காக உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவிலிருந்து வந்திருந்த உதவி ஆய்வாளா் யாதவ் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். பின்னா், ஸ்ரீபுல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பி/171 ராணுவ குடியிருப்புக்குச் சென்று தன்னாத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments