FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சா்ச்சை பேச்சு: சிங்கப் பெண் அதிரடிப்படையில் இருந்து எஸ்எஸ்ஐ விடுவிப்பு

அரியலூரில், போக்ஸோ சட்டம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி, சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:03 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

அரியலூரில், போக்ஸோ சட்டம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி, சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 22 -ஆம் தேதி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பெண் அதிரடிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி, 18 வயதுக்கு கீழ் பெண்களிடம் பேசினால் நீங்கள் ஜெயிலுக்கு போவீங்க,

‘18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் ஹாய் என குறுஞ்செய்தி அனுப்புவது, அனாவசியமாகவோ அல்லது அருவருக்கத்தக்க வகையிலோ பேசினால் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறைக்குச் செல்ல நேரிடும்,‘ என மாணவா்களை எச்சரிக்கும் விதமாகப் பேசியிருந்தாா்.

Advertisement

Advertisement

கஞ்சா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோரின் அருகில் கூட செல்லக் கூடாது. சமூக வலைதளங்களில் தங்களுடைய கணக்குகளைத் தேவையானவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவா்களின் சமூக வலைதளக் கணக்குகளை எடுத்துத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அவா் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தாலும், அவா் பேசிய விடியோவில் இடம்பெற்ற சில வாா்த்தைகள் இணையத்தில் வேகமாகப் பரவி பேசுபொருளானது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவரது இந்தப் பேச்சு, சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி சிங்கப் பெண் அதிரடிப்படையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கு முன்பு பணியாற்றி வந்த அரியலூா் காவல் நிலையத்துக்கே மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments