உலகத்துடன் போட்டியல்ல... இனி தலைமை! ஐஐடி இளைஞர்களைப் புகழ்ந்த பிரஹலாத் ஜோஷி!
தில்லி ஐஐடியில் மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியது பற்றி..
நாட்டின் இளைஞர்கள் இனி உலகத்துடன் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதற்குத் தலைமை தாங்குகிறார்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
தில்லி ஐஐடியின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரஹலாத் ஜோஷி கலந்துகொண்டு பேசினார். கல்வி அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்ற பிறகு, கல்வி நிறுவனத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
மாணவர்கள் அனைவரின் முன்னிலையில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடி இந்திய இளைஞர்களின் திறன்கள் மீது எப்போதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இன்று, 4.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
Advertisement
Advertisement
2014-ஆம் ஆண்டு முதல், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்துள்ளது. 650-க்கும் மேற்பட்ட புதிய பல்கலைக்கழகங்கள், 14,000 புதிய கல்லூரிகள், 4,000-க்கும் மேற்பட்ட புதிய ஐடிஐ-கள், 9 புதிய ஐஐஎம்-கள், 7 புதிய ஐஐடி-கள் மற்றும் 13 புதிய எய்ம்ஸ் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கு அதிகமாகவும், மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் 823 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1.4 லட்சம் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன.
14,000-க்கும் மேற்பட்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மற்றும் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் மூலம் குழந்தைகள் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் புதிய யோசனைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இதேபோன்று விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவத்தைப் பிரதமர் மோடி அளித்துவருகிறார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஒரு காலத்தில், இந்திய இளைஞர்கள் உலகத்துடன் எவ்வாறு போட்டியிடுவார்கள் என்பதே கேள்வியாக இருந்தது. இன்று, இந்தியாவின் இளைஞர்கள் உலகிற்கு எவ்வாறு தலைமை தாங்குகிறார்கள் என்பதை உலகம் பார்த்து வருகிறது. இதில் பெண் சக்தி நிச்சயமாகப் பின்தங்கியிருக்கவில்லை.
இன்று, நீங்கள் ஐஐடியிலிருந்து வெறும் பட்டத்துடன் மட்டும் வெளியேறவில்லை. மாறாக, ஒரு நோக்கத்துடன் புதுமைகளைப் படைப்பதற்கும், நேர்மையுடன் தலைமை தாங்குவதற்கும், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) கனவை நனவாக்குவதில் பங்களிப்பதற்கும் ஏற்ற பொறுப்புணர்வுடனும் வெளியேறுகிறீர்கள் என்று பட்டம் பெறும் மாணவர்களிடம் ஜோஷி கூறினார்.
Union Education Minister Pralhad Joshi on Saturday said India's education ecosystem has become "learner-centric, research-driven, future-ready", asserting that the country's youth are no longer merely competing with the world but are leading it.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.