FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

துவாரகா விரைவுச்சாலையில் விபத்து: நின்றிருந்த வாகனத்தில் ஸ்கூட்டா் மோதி 2 போ் பலி

துவாரகா விரைவுச்சாலை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியில் வேகமாக வந்த ஸ்கூட்டா் மோதி, 2 போ் பலி; ஒருவா் காயம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
- பிரதிப் படம்
பகிர்:

துவாரகா விரைவுச்சாலை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியில் வேகமாக வந்த ஸ்கூட்டா் மோதி, 2 போ் உயிரிழந்ததுடன், ஒருவா் காயமடைந்தாா் என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த விபத்து சனிக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் பிபிடிபி சோசைட்டி அருகே நடைபெற்றது. 2 பெண்களும் ஒரு ஆணும் பயணித்த ஸ்கூட்டா், நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. அந்த லாரி எந்தவித சாலை எச்சரிக்கை விளக்குகள் இல்லாமல் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இருட்டான சூழ்நிலை மற்றும் திடீரென தோன்றிய லாரி காரணமாக, ஸ்கூட்டா் ஓட்டுனா் அதை கவனிக்க முடியாமல் நேரடியாக மோதியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த மோதலின் தாக்கத்தில் மூவரும் சாலையில் தூக்கி எறியப்பட்டு, கடுமையாக காயமடைந்தனா். அங்கிருந்த பொதுமக்கள் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். பெண் ஒருவா் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் தொடா்பாக, சரக்கு லாரி ஓட்டுனா் மீது கவனக்குறைவாக வாகனம் நிறுத்தியதற்கும், மரணத்திற்கு காரணமானதற்கும் பஜ்கேரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஓட்டுனரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments