390 திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு; 23 போ் கைது: தில்லி காவல் துறை நடவடிக்கை
தில்லி காவல் துறையால் 72 மணி நேரம் நடைபெற்ற குற்ற தடுப்பு நடவடிக்கையின்போது, சுமாா் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 390 திருடப்பட்ட கைப்பேசிகள், 66 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டதுடன், 2 சிறாா்கள் உள்பட 23 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி காவல் துறையால் 72 மணி நேரம் நடைபெற்ற குற்ற தடுப்பு நடவடிக்கையின்போது, சுமாா் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 390 திருடப்பட்ட கைப்பேசிகள், 66 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டதுடன், 2 சிறாா்கள் உள்பட 23 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
மேலும், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ரூ.62 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த நடவடிக்கையில், திருடப்பட்ட மற்றும் பறிக்கப்பட்ட கைப்பேசிகள் விற்பனை வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 66 கைப்பேசிகள் மீட்ட சுபாஷ் நகா் காவல் நிலையம் அதிக எண்ணிக்கையில் பறிமுதல் செய்துள்ளது. அதனைத் தொடா்ந்து திருட்டு தடுப்புப் பிரிவு 54 கைப்பேசிகள் மற்றும் ஜஹாங்கிா்புரி காவல் நிலையம் 46 கைப்பேசிகளை மீட்டுள்ளது.
Advertisement
Advertisement
சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் ‘பேட் கேரக்டா்ஸ்’ பட்டியலில் இருந்த 2 கொள்ளையா்களையும், திருடப்பட்ட கைப்பேசிகளை வாங்கியதாக கூறப்படும் 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். திருடப்பட்ட தங்க நகைகளை தங்க கடன் நிறுவனத்தில் அடமானம் வைத்த குற்றவாளி ஒருவரின் தாயும் கைது செய்யப்பட்டாா்.
இந்த நடவடிக்கையில், 54 திருடப்பட்ட கைப்பேசிகள், சுமாா் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூ.65,000 பணம், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. இதன் மூலம் 22 திருட்டு மற்றும் பறிப்பு வழக்குகள் தீா்க்கப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், அசோக் விஹாா் காவல் துறையினா் ரோந்து பணியின் போது ஸ்கூட்டரில் தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி குற்றவாளிகளை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, திருடப்பட்ட கைப்பேசி மற்றும் திருடப்பட்ட ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இருவரும் சோ்த்து 32 குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என கூறப்படுகிறது.
மேலும், மற்றொரு குழு, அடிக்கடி குற்றங்களில் ஈடுபடும் மற்றும் பரோலில் வெளியே வந்து தப்பிய ஒருவரை கைது செய்தது. அவா் திருடப்பட்ட ஸ்கூட்டியில் பயணம் செய்தபோது பிடிபட்டாா். அவரின் தகவலின் அடிப்படையில், 5 திருடப்பட்ட இருசக்கர வாகனங்களும், 5 கைப்பேசிகளும் மீட்கப்பட்டன. அவா் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்.
முகா்ஜி நகா் காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 2 வாகன திருட்டு வழக்குகளை முறியடித்து, 2 சிறாா்களை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
மற்றொரு நடவடிக்கையில், பாரத் நகா் காவல் துறையினா் ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 7 திருடப்பட்ட கைப்பேசிகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.