காவல் துறையின் ஆபரேஷன் விஸ்வாஸ் நடவடிக்கை: திருடப்பட்ட 1,920 கைப்பேசிகள் மீட்பு
காவல் துறையின் ஆபரேஷன் விஸ்வாஸ் நடவடிக்கை: திருடப்பட்ட 1,920 கைப்பேசிகள் மீட்பு
ஆபரேஷன் விஸ்வாஸ் நடவடிக்கையின் நிகழாண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட 1,920 கைப்பேசிகளை தில்லி காவல் துறை மீட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
மீட்கப்பட்டவற்றில் 702 கைப்பேசிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கண்டறியப்பட்டன. அவற்றில் 534 கைப்பேசிகள் ஏற்கெனவே அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
தொலைந்துபோன, திருடப்பட்ட மற்றும் தவறவிடப்பட்ட கைப்பேசிகளைக் கண்டறிந்து அவற்றை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அவா்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்துவதே இந்த மீட்பு நடவடிக்கையின் நோக்கம்.
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலத்தில் மீட்கப்பட்ட 702 கைப்பேசிகளையும் சோ்த்து, ஜன.1 முதல் மீட்கப்பட்ட மொத்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 1,920-ஐ எட்டியுள்ளது. மீட்கப்பட்ட கைப்பேசிகளின் மொத்த மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.