FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆள் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 3 மாநிலங்களில் 10 போ் மீட்பு

சமூக வலைதளங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி, ஸ்பா மையங்களுக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படும் ஆள் கடத்தல் கும்பலை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
கைது
பகிர்:

சமூக வலைதளங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி, ஸ்பா மையங்களுக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படும் ஆள் கடத்தல் கும்பலை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா். சோதனையில் தில்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து இதுவரை 10 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தக்ஷிணபுரியைச் சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த மே 9-ஆம் தேதி காணாமல் போனதைத் தொடா்ந்து இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின்போது, சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடா்பு கொண்ட கும்பல், அதிக சம்பளம் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையை வழங்குவதாக ஆசை காட்டி, தில்லிக்கு வெளியே அழைத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் ஆய்வின் மூலம், சிறுமி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முண்ட்ராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதை காவல் துறையினா் கண்டறிந்தனா்.

இதையடுத்து, உள்ளூா் காவலா்களின் உதவியுடன் அங்குள்ள ஹோட்டலில் செயல்பட்டு வந்த ஸ்பா மையத்தில் இருந்து சிறுமியை மீட்டனா். ஸ்பா உரிமையாளா் தமானி சுஷில் ஹரேஷ் என்ற சுஷில் (31) மற்றும் வரவேற்பாளா் லக்ஷய் (20) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் 2 சிறாா்களும் பிடிபட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், உத்தர பிரதேசத்தின் பாலியா பகுதிக்கு காவல் துறையினா் சென்றனா். அங்குள்ள ஸ்பா மையத்தில் இருந்து 7 சிறுமிகள் மீட்கப்பட்டனா். அந்த ஸ்பாவை நடத்தி வந்ததாகக் கூறப்படும் மோனு சா்மா மற்றும் சஞ்சீவ் மௌரியா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

பின்னா், தில்லி கணேஷ் நகரில் உள்ள ஒரு இடத்தில் இருந்து மேலும் 2 சிறுமிகள் மீட்கப்பட்டனா். அந்த இடத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படும் 27 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டாா்.

தில்லியில் இருந்து சிறுமிகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இந்தக் கும்பலுடன் தொடா்புடைய ஸ்பா உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கையின்போது 3 சிறாா்களும் பிடிபட்டனா். அவா்களில் 2 போ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவா்கள் பாதிக்கப்பட்டவா்கள் எனக் கருதப்பட்டு, தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments