சபல புத்தி கொண்ட ஆண்களோடு சல்லாபத்தில் ஈடுபட்டு பல கோடியுடன் பண மெத்தையில் புரளும் இளம்பெண்!
முகம் தெரியாத சபல புத்தி கொண்ட ஆண்களோடு சல்லாபத்தில் ஈடுபட்டு பல கோடியுடன் பண மெத்தையில் புரளும் இளம்பெண் குறித்து...
பிரயாக்ராஜ்: பல்வேறு பெயர்களில் சமூக ஊடக கணக்குகளை தொடங்கி அதில் முகம் தெரியாத சபல புத்தி கொண்ட ஆண்களோடு சல்லாபத்தில் ஈடுபட்டு பல கோடியுடன் பண மெத்தையில் புரளும் ஒரு இளம்பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் பல்லவி சிங் ராஜ்புத். இவர் செல்போனில் டேட்டிங் செயலி மூலம் சபல புத்தி கொண்ட ஆண்களோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டு, பின்னர் அவர்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டும் மிரட்டியும் பணம் பறித்து வருவதாக அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஒருவர் அளித்த புகார் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆண்களை ஏமாற்றி ரூ. 6 கோடி வரை பறித்தது எப்படி?
Advertisement
Advertisement
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் பெண், பல்வேறு பெயர்களில் 'டிண்டர்' மற்றும் சமூக ஊடக கணக்குகளை தொடங்கி அதில் சபல புத்தி கொண்ட முகம் தெரியாத ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு சல்லாபத்தில் ஈடுபட்டு, பின்னர் அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி அவர்களிடம் குற்றவியல் வழக்குகள் பாயும் என்று மிரட்டி ஒரு கும்பல் பெருந்தொகையை பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல்லவி சிங் ராஜ்புத், ஆரம்பத்தில் நட்பாக பேசக் தொடங்கி பின்னர் நெருக்கமான உறவாக மாறி; நாளடைவில் ஆபாசமான வார்த்தைகளால் அவர்களை மயக்கி அவர்களுக்கு தனது அந்தரங்கமான புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்புவார். பின்னர் சபல புத்தி ஆண்களோடு வெளியில் சென்று தனியறையில் அரைகுறை ஆடைகளோடு தன்னுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரகசியமாக படம் எடுத்துள்ளார்.
பின்னர், அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி அவர்களை மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்தால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி போன்ற தீவிர குற்றவியல் வழக்குகளில் சிறைக்கு தான் செல்ல வேண்டும், பொதுவெளியில் மானம் போய்விடும் என மிரட்டியுள்ளார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பெரிய மனிதர்கள் பலரக் எங்கே தங்களுக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் கேடகும் போதெல்லாம் பல லட்சங்களை, கோடிகளை இறைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது மிரட்டலுக்கு பணியாதவர்கள் குறித்து பல்லவி சிங் ராஜ்புத் அளித்த புகார்களின் அடிப்படையில் ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கோடு தொடர்புடையதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு படத்தில் படுக்கை மெத்தையில் அடுக்கப்பட்ட பணக்கட்டுகளுடன் புரளும் புகைப்படமும், துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் மற்றொரு புகைப்படமும் வைரலாகி வருகின்றன. ஆனால், அவை எப்போது, எங்கு, எந்தச் சூழலில் எடுக்கப்பட்டன என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மேலும், "சுவீட்டி திவாரி" என்கிற பெயரில் தனியாக சமூக ஊடக கணக்கை தொடங்கி அதன் மூலமாகவும் பலரை தனது வலையில் சிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. பல்லவி சிங் ராஜ்புத் மோசடிக்கு இரண்டு பெண் நண்பர்களும், இரண்டு ஆண் நண்பர்களும் பெரிய அளவில் உதவியுள்ளனர். இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.
ஆபாச செயலிகள் மூலம் பலரும் பணத்தையும் கௌரவத்தை இழந்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் தேவையில்லாமல் அறிமுகம் இல்லாத நபர்களோடு பழகினால் இதுபோன்ற ஆபத்தான வலைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்றும் எனவே அறிமுகம் இல்லாதவர்களோடு சமூக ஊடகங்களில் எந்தவித தொடர்பும் வைக்க வேண்டாம் என்று உத்தரப்பிரசேத போலீசார் கொண்டுக் கொண்டுள்ளனர்.
A woman in Uttar Pradesh has been accused of befriending men through Tinder and social media before allegedly using intimate photographs and videos to blackmail them and demand large sums of money.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.