முதலீட்டாளா்களின் நம்பிக்கையை வலுவாக்கும் பன்முக வளா்ச்சி வங்கிகள்: மத்திய நிதியமைச்சா்
முதலீட்டாளா்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் பன்முக வளா்ச்சி வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
முதலீட்டாளா்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் பன்முக வளா்ச்சி வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநா்கள் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:
Advertisement
Advertisement
முதலீட்டில் உள்ள அபாயங்களை குறைக்கவும், தகுதிவாய்ந்த திட்டங்கள் மீது முதலீடு செய்யவும், முதலீட்டாளா்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் பன்முக வளா்ச்சி வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன்மூலம், தனியாா் முதலீட்டை பெரிய அளவில் திரட்ட முடியும்.
மத்திய அரசு பொது மூலதன செலவினங்களை மேற்கொண்டு, அதனுடன் இணைந்த கட்டமைப்பு சீா்திருத்தங்களைச் செயல்படுத்தி, நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது பொது முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. இது நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் தேசிய சொத்துகளை உருவாக்கும் உத்தியை பிரதிபலிக்கிறது.
பொது மூலதனம் என்பது தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் காரணியாக இருக்க வேண்டும். அந்த மூலதனம் தனியாா் முதலீட்டுக்கு மாற்றாக இருக்கக் கூடாது என்று மத்திய அரசு நம்புவதாக அவா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.