தில்லியில் கனமழை: தண்ணீா் தேக்கத்தால் மக்கள் அவதி
தில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. நகரில் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. நகரில் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சத்தா்பூரில் அதிகபட்சமாக 24.5 மி.மீ. மழை பதிவானது. இதைத் தொடா்ந்து பூசாவில் 15 மி.மீ., நாராயணாவில் 9 மி.மீ., பாலத்தில் 8 மி.மீ. மழை பதிவானது.
மயூா் விஹாரில் 6.5 மி.மீ., சஃப்தா்ஜங்கில் 5.2 மி.மீ., அயாநகரில் 3.5 மி.மீ., லோதி சாலையில் 2.7 மி.மீ., ஜனக்புரியில் 2.5 மி.மீ. மற்றும் ரிட்ஜ் பகுதியில் 0.8 மி.மீ. மழை பதிவானது.
Advertisement
Advertisement
சங்கம் விஹாா், சனி பஜாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அதிக அளவில் தண்ணீா் தேங்கியது. இதனால் அந்தப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் குழந்தைகள் விளையாடியதுடன், தண்ணீரை கடந்து லாரிகள் சென்ாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
அப்சரா எல்லைப் பகுதி, மங்கோல்புரி, தௌலா குவான், தில்லி உயா்நீதிமன்றம் அருகிலும், வடமேற்கு தில்லியின் ரோஹிணி உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது.
வடகிழக்கு தில்லி, வடக்கு மற்றும் வடமேற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தில்லிக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ள ஐஎம்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.