சுதந்திர நாள் வாழ்த்து: உலகத் தலைவர்களுக்கு முர்மு, மோடி நன்றி
சுதந்திர நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு முர்மு, மோடி நன்றி தெரிவித்துள்ளது குறித்து...
புதுதில்லி: நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், வாழ்த்துகளைத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்துள்ளனர்.
உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து முர்மு 'எக்ஸ்' வலைதள பக்க பதிவிட்டிருப்பதாவது:
மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது மூயிஸ்க்கு நன்றி தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் இந்தியா-மாலத்தீவு இடையிலான கூட்டுறவு தொடர்ந்து வளர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
நேபாள அதிபர் ராமச்சந்திர பௌடெலுக்கு நன்றி தெரிவித்துள்ள முர்மு, வரும் ஆண்டுகளில் நேபாளத்துடனான சிறப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது என குறிப்பிட்டார்.
மேலும், ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டா் பெல்லா்ஜினிக்கு தெரிவித்துள்ள நன்றி பதிவில், மக்களின் நலனுக்காக இந்தியா-ஸ்லோவாக்கியா இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது என குறிபிட்டுள்ளார்.
இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெஸாக்கிற்கு நன்றி தெரிவித்த முர்மு, இந்திய மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கிடையிலான நட்புறவு தொடர்ந்து வளர வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
பிரதமர் நரேந்தி மோடி நன்றி
இதேபோன்று சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்துள்ள உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்துள்ள இஸ்ரேல் அதிபா் ஐசா் ஹெஸாக், பிரதமா் நெதன்யாகு, பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே மற்றும் நேபாளம் பிரதமா் பாலேந்திர ஷா, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ், கயானா அதிபா் இா்ஃபான் அலி மற்றும் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் ஆகியோருக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதிபா் ஐசா் ஹெஸாக்கு தெரிவித்துள்ள நன்றி பதிவில், இந்தியா-இஸ்ரேல் இடையேயான சிறப்பு வியூக கூட்டாண்மை வலுவடைந்து வருகிறது. புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு மக்களிடையேயான பிணைப்பும் மேம்பட்டு வருகிறது. இஸ்ரேலுடனான நட்பை இந்தியா மதிப்புமிக்கதாக கருதுகிறது என்றும் பூடான் மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா வலுவான இருதரப்பு கொள்கைகளை பின்பற்றி வருகிறது என பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளார்.
President Droupadi Murmu, PM Modi has thanked world leaders for congratulating India on the occasion of its 80th Independence Day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.