பிரதமர் மோடிக்காக 1,100 ராக்கிகளை தயாரித்த பிருந்தாவன் விதவைகள்!
பிருந்தாவனத்தில் உள்ள விதவைகள் குழுவினர் தயாரித்த ராகிகள் பற்றி..
ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதற்காக, பிருந்தாவனத்தில் உள்ள விதவைகள் குழுவினர் 1,100 ராகிகளைத் தயாரித்துள்ளனர்.
பிருந்தாவனத்தில் தயாரித்த ராக்கிகளில் பிரதமரின் வண்ணமயமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பிருந்தாவனத்தில் உள்ள பல்வேறு ஆசிரமங்களில் வசிக்கும் விதவைகளால் இவை வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டதாக சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் நித்யா பதக் தெரிவித்தார்.
சமூகம் விதித்திருந்த நீண்டகாலக் கட்டுப்பாடுகளை மீறி, ஞாயிற்றுக்கிழமையன்று பிருந்தாவனத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோபிநாத் கோயிலில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களில் விதவைகள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக நித்யா பதக் கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடிக்கான ராக்கிகள் அலங்கரிக்கப்பட்டுக் கட்டப்பட்டது. இந்த வண்ணமயமான அலங்காரக் கயிறுகளைக் கையால் தயாரிப்பதற்கு அந்தப் பெண்கள் பல நாள்களைச் செலவிட்டனர்.
மோடியைத் தங்கள் சகோதரராகக் கருதுவதால், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இனிப்புகளையும் ராக்கிகளையும் அனுப்பி வருகின்றனர். ஐந்து பேர் கொண்ட விதவைகள் குழுவினர் பிரதமரின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு ராக்கிகளைக் கட்டுவார்கள்.
பல ஆண்டுகளாக, பிருந்தாவனத்தில் உள்ள விதவைகள் கடுமையான நடத்தைகளை எதிர்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டு, எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
சுமார் 6,000 விதவைகள் பெரும்பாலும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் - தெருக்களில் பிச்சை எடுப்பது, கோயில் படிக்கட்டுகளில் படுத்திருப்பது, உணவிற்காக யாசிப்பதையோ காண முடிந்தது. பல்வேறு கொடுமைகளுக்குப் பின்பு, ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாட்டங்களில் பங்கேற்கக்கூட விதவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
2012-ல், பிருந்தாவனத்தில் வசிக்கும் விதவைகளின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பராமரிக்குமாறு உச்ச நீதிமன்றம் 'சுலப் இன்டர்நேஷனல்' அமைப்பைக் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, தன்னார்வத் தொண்டு நிறுவனம் வாரணாசி மற்றும் பிருந்தாவனத்தில் 1,500 விதவைகளைப் பராமரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
A group of widows in Vrindavan have crafted 1,100 rakhis for Prime Minister Narendra Modi to be presented to him on Raksha Bandhan this year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.