FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மணிப்பூரில் 46 தீவிரவாதிகள் சரண்! ஆயுதங்கள் ஒப்படைப்பு!

தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தது பற்றி..

பகிர்:

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 46 தீவிரவாதிகள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

மணிப்பூர் ரைஃபிள்ஸ் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாயகம் திரும்புதல் நிகழ்ச்சியில், தடை செய்யப்பட்ட காங்க்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 46 தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் கெம்சந்த் சிங் கூறுகையில்,

Advertisement

Advertisement

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த மோதலின் விளைவாகவே பலர் ஆயுதங்களை ஏந்தினர்.

ஆயுதங்களைக் கைவிட்ட தடைசெய்யப்பட்ட அமைப்பையும் அதன் உறுப்பினர்களையும் வரவேற்கிறேன்.

ஆயுதங்களால் முற்போக்கான வளர்ச்சியை எட்ட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். 2018-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட 'சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் இந்த 46 உறுப்பினர்களின் சரணடைதல் நிகழ்வு நடைபெற்றதாக முதல்வர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments