FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மீண்டும் போராட்டத்தில் இறங்கினார் அபிஜீத் தீப்கே!

பள்ளி முதல்வர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகக் குற்றம் சாட்டி அபிஜீத் தீப்கே மக்களுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளது பற்றி...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:44 pm IST
போராட்டக் களத்தில் மக்களுடன் அபிஜீத் தீப்கே. - படம் - எக்ஸ்
பகிர்:

பள்ளி முதல்வர் மது அருந்திவிட்டு, பள்ளிக்கு வருவதாகக் குற்றம் சாட்டி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மக்களுடன் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் அபிஜீத் தீப்கே மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டின் சுதந்திர நாள் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட்ட நிலையில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சந்துக் பிம்ப்ரியில் தேசிய கொடியேற்றினார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகள், கிராமவாசிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் சிஜேபி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, தனது சொந்த கிராமமான சந்துக் பிம்ப்ரியில் இருந்து ஸ்கூல்திக்கரோ (பள்ளிகளைச் சீரமைப்போம்) எனும் பிரசாரத்தை அபிஜீத் தீப்கே தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சந்துக் பிம்ப்ரியில் உள்ள பள்ளியின் முதல்வர் மது அருந்திவிட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அபிஜீத், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி தனது ஊர் மக்களுடன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டக் களத்தில் அபிஜீத் தீப்கே பேசியதாவது:

இந்தப் பள்ளியின் முதல்வர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருகிறார். ஆகையால், அந்தப் பதவியை விட்டு அவரை நீக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளி முதல்வர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால் கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை நியமிக்கக் கோருகிறோம். இங்குள்ள கிராம மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று தெரிவித்தார்.

summary

Abhijit Deepke, leader of the Cockroach Janata Party staged a protest with the public on Tuesday (Aug. 18), alleging that the school principal was coming to school after consuming alcohol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments