சிஜேபி தொடங்கியுள்ள பிரசாரத்தின் நோக்கம் என்ன? அபிஜீத் தீப்கே விளக்கம்
சுதந்திர தினத்தையொட்டி அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய பிரசாரத்தை சிஜேபி தொடங்கியுள்ளது குறித்து...
நாட்டின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களில் புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஆக. 12) தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுத்து நாடு தழுவிய பிரசாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்துள்ளது.
கிராமப்புறங்களில், மலைப்பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், முறையான மதிய உணவு, விளையாட்டுத் திடல், சாலை வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக ஆதரவாளர்கள், பெற்றோர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து விடியோ பதிவு செய்யுமாறும் சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆன நிலையில், புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது, பிரதமர் இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அடிப்படை கட்டமைப்புகள் கூட இல்லாமல் கிராமப்புறங்களில் ஏராளமான அரசுப் பள்ளிகள் உள்ளதாகவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் பள்ளியின் நிலை குறித்து விடியோ வெளியிட வேண்டும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை டேக் செய்து ஏராளமான விடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை, பேருந்து வசதி இல்லை என மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேச கிராமப்புற மாணவர்கள் பலர் விடியோக்கள் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு பள்ளிகளை மேம்படுத்துவதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி களமிறங்கியுள்ளது குறித்து அபிஜீத் தீப்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அபிஜீத் தீப்கே, நாடு முழுவதும் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட, கவனிக்கப்படாத அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர்கள் கற்றலுக்கு உதவுவதே இந்த பிரசாரத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
This campaign is aimed at fixing the village schools across the country says Cockroach Janta Party Founder Abhijeet Dipke
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.