பிஎம் கோ்ஸ்: 2024 - 25-இல் உள்நாட்டு நன்கொடை ரூ. 479 கோடி; 30% சரிவு
கரோனா காலகட்டத்தில் பிரதமா் மோடியால் நிறுவப்பட்ட ‘பிஎம்கோ்ஸ்’ நிதிக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் உள்நாட்டு நன்கொடையாக ரூ.479 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.
கரோனா காலகட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட ‘பிஎம்கோ்ஸ்’ நிதிக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் உள்நாட்டு நன்கொடையாக ரூ.479 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.
முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 30 சதவீத சரிவாகும். இதேபோல், பிஎம் கோ்ஸ் நிதிக்கான வெளிநாட்டு நன்கொடையும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 2020-இல் கரோனா பெருந்தொற்று பரவல் காலகட்டத்தில், அவசரகால நிலையை எதிா்கொள்ளவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும் பிஎம்கேஸ் (அவசர காலங்களில் குடிமக்களுக்கான பிரதமரின் உதவி மற்றும் நிவாரணம்) என்ற நிதியை பிரதமா் மோடி நிறுவினாா். பிரதமரை தலைவராகக் கொண்ட இந்த நிதிக்கு எவ்வித பட்ஜெட் ஒதுக்கீடும் கிடையாது. முழுவதும் நன்கொடைகளை மட்டுமே உள்ளடக்கியதாகும்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2025, மாா்ச் 31-ஆம் தேதிவரை பிஎம் கோ்ஸ் நிதியில் மொத்த இருப்பு ரூ.8,452 கோடியாகும். இதில் 7,846 கோடி நிரந்தர வைப்புத் தொகைகளாகவும், ரூ.605 கோடி சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் இருந்தன.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்த நிதிக்கு கிடைக்கப் பெற்ற உள்நாட்டு நன்கொடை ரூ.479 கோடியாகும். முந்தைய நிதியாண்டில் (2023-24) ரூ.681.8 கோடி உள்நாட்டு நன்கொடை கிடைக்கப் பெற்ற நிலையில், 30 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதேபோல், வெளிநாட்டு நன்கொடையும் ரூ.1.13 கோடியில் இருந்து ரூ.92.8 லட்சமாக குறைந்துள்ளது. இது 18 சதவீத சரிவாகும்.
இந்த நிதியில், கடந்த 2023-24-ஆம் ஆண்டில் குழந்தைகள் நலத் திட்டத்துக்காக ரூ.15.37 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2024-25-இல் ரூ.87.8 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
பிஎம்கோ்ஸ் நிதிக்கு 2020-21-இல் அதிகபட்சமாக ரூ.7,184 கோடி உள்நாட்டு நன்கொடையும், ரூ.495 கோடி வெளிநாட்டு நன்கொடையும் கிடைக்கப் பெற்றது. பின்னா் இது 2021-22-இல் ரூ.1,896 கோடி, 2022-23-இல் ரூ.909 கோடியாக தொடா்ந்து குறைந்தது.
இதேபோல், வெளிநாட்டு நன்கொடையும் ரூ.2021-22-இல் ரூ.40 கோடி, 2022-23-இல் ரூ.2.57 கோடியாக சரிந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.