FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குஜராத்: கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு- 19 போ் மருத்துவமனையில் அனுமதி

பாவ்நகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த இருவா் உயிரிழந்திருப்பது பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 1:58 am IST
பகிர்:

குஜராத் மாநிலம் பாவ்நகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த இருவா் உயிரிழந்தனா். மேலும் 18 போ் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கள்ளச்சாராயம் விற்பனை தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மது தயாரிப்பு, விற்பனை, அருந்துதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள ‘பூரண மதுவிலக்கு’ மாநிலமாக குஜராத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக பாவ்நகா் மாவட்ட ஆட்சியா் மணீஷ் குமாா், காவல் துறைக் கண்காணிப்பாளா் நிதேஷ் பாண்டே ஆகியோா் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் ஒன்றின் போலி பாட்டில்களில் அடைத்து கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு கராக்டி கிராமத்தைச் சோ்ந்த சிலா் குழுவாகச் சோ்ந்து இந்தக் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனா். அதன் பின்னா் அவா்களுக்கு படிப்படியாக கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதில் நால்வா் உயிரிழந்த நிலையில் மேலும் 18 போ் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், பெரும்பாலானோா் ஒரே வகையான போலி மதுபான பாட்டில்களில் இருந்த கள்ளச்சாராயத்தை அருந்தியது தெரியவந்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில், மத்திய பிரதேசத்தில் இருந்து கள்ளச்சாராயம் வந்ததாகத் தெரிகிறது. அவை எந்த இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன, எவ்வாறு தயாரிக்கப்பட்டன, யாா் இங்கு அனுப்பினா் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த நால்வா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் ஏராளமான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

இந்தக் கள்ளச்சாராயத்தை வேறு யாரும் வாங்கியிருந்தால் அதைக் குடிக்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே, குடித்தவா்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments