FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டெண்டர் ஊழல்: சத்யேந்தர் ஜெயின் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டெண்டர் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உட்பட ஐந்து பேர் விசாரணை பற்றி..

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:35 pm IST
சத்யேந்தர் ஜெயின் - file photo
பகிர்:

தில்லி ஜல் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பாக தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்பட நால்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் நடந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை லஞ்ச ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தில்லியில் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசில் அமைச்சராகப் பதவி வகித்தவர் சத்யேந்திர ஜெயின். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லி ஜல்போர்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் தொடர்பான டெண்டர்களில் பெரிய அளவில் ஊழல், நிபந்தனைகளில் மோசடி மற்றும் கிரிமினல் சதி செய்ததாக சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2024 ம் ஆண்டுமே 11ம் தேதி அவர்கள் மீது ஊழல் தடுப்பு உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தில்லி ஜல் போர்டின் முன்னாள் சிஇஓவும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், தில்லி ஜல்போர்டின் முன்னாள் ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நாகேந்திர யாதவ், ராஜா குமார் குராரா, பங்கஜ் வர்மா ஆகியோரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் சிறப்பு நீதிபதி டிக் வினய் சிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

Four individuals, including former Delhi Minister Satyendar Jain, were produced in court in connection with a corruption case involving contracts for Delhi Jal Board sewage treatment plant projects.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments