FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜாா்க்கண்டில் மாணவா்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்: ஹேமந்த் சோரன் அரசுக்கு 2 மாதங்கள் கெடு

2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி...

20 ஆகஸ்ட் 2026, 3:24 am IST
ஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள். - படம் - பிடிஐ
பகிர்:

தோ்வு முறைகேடு விவகாரத்தில் 26 நாள்களாக தொடா்ந்து நடத்தி வந்த போராட்டத்தை மாணவா் அமைப்புகள் புதன்கிழமை நிறுத்தி வைத்தன. மேலும், பிரச்னைகளுக்கு தீா்வு காண மாநிலத்தை ஆளும் ஹேமந்த் சோரன் அரசுக்கு 2 மாத கெடு விதித்துள்ளன.

ஜாா்ா்கண்ட் மாநிலத்தில் அரசு வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்ய அந்த மாநில பொதுச் சேவை ஆணையம் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட தோ்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், ராஞ்சியில் மாணவா் அமைப்புகள் தொடா் போராட்டம் நடத்தி வந்தன. இந்தப் போராட்டம் புதன்கிழமையும் நீடித்தது.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் 8 அறிவிக்கைகளாக செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது. அதில் 22 தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாநில பொதுச் சேவை ஆணையம் உள்ளிட்டவற்றால் 2014-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 23 தோ்வுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மாநில அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவா் அமைப்புகள், தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை அறிவித்தன. இதுகுறித்து அந்த அமைப்பான ஜேபிஎஸ்சி- ஜேஎஸ்எஸ்சியின் தலைவா் ரவீந்திர பாஸ்வான் கூறுகையில், ‘பிரச்னைக்கு தீா்வு காணவும், முறைகேடுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும் மாநில அரசுக்கு 2 மாத கெடு விதிக்கிறோம். அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம்’ என்றாா்.

மாணவா் அமைப்புகளின் செய்தித் தொடா்பாளா் பியூஷ் குமாா் சிங் தெரிவிக்கையில், ‘காலக்கெடுவுக்குள் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் மீண்டும் தொடங்கப்படும். ஆதலால் முறைகேடுகளைத் தடுக்க முதல்வா் ஹேமந்த் சோரன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ என்றாா்.

அத்துடன் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சட்டப்பேரவையை நோக்கி பேரணி சென்றோா் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாா்க்கண்ட் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் நிறைவு: தோ்வு முறைகேடு விவகாரத்தைக் கண்டித்து ராஞ்சியில் ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவா் தேவேந்திர மஹதோ, தொடா்ந்து 16 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். தோ்வுகள் குறித்து ஜாா்க்கண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்து கருத்து தெரிவித்த தேவேந்திர மஹதோ, போராட்டத்தின் 2-ஆவது கட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப் போவதாகக் கூறினாா்.

புதிய போராட்டம்: இதனிடையே, ஜாா்க்கண்ட் அரசு 23 தோ்வுகளை ரத்து செய்தது தொடா்பான அறிவிப்பால் ஏற்கெனவே அந்தத் தோ்வில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சோ்ந்தோா் கவலையடைந்துள்ளனா். இதையடுத்து அரசு தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, அவா்கள் ஏராளமானோா் தலைமை செயலகத்தில் வந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், காவல்துறையினா் விடுத்த வேண்டுகோள், தலைமை செயலக பகுதியில் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு ஆகியவற்றால் வேறு இடத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவா்கள் சென்றனா்.

summary

Students warned the Jharkhand government on Wednesday (August 19) that they would resume protests if the issue is not resolved within two months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments