FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் போராட்டம்: தேசிய கொடியை ஏந்தி நடைப்பயணம்!

ஜார்ரக்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டது பற்றி...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:58 pm IST
ஜார்ரக்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தி நடைப்பயணம். - படம் - பிடிஐ
பகிர்:

ஜார்ரக்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போராடி வரும் மாணவர்கள் சுதந்திர நாளை முன்னிட்டு, தேசிய கொடியை ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டனர்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

போராட்டம் தொடங்கி இன்றுடன் 22 நாள்கள் கடந்தும் அரசு மாணவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில், சுதந்திர நாளை முன்னிட்டு போராட்டக் களமான ஜெய்பால் சிங் முண்டா மைதானத்திலிருந்து ஆல்பர்ட் எக்கா சௌக் வரை தேசிய கொடியுடன் போராட்டக்காரர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ஆதரவாளர்கள், “பாரத் மாதாகி ஜெய்” ”வந்தே மாதரம்” போன்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

முன்னதாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

Students participating in the protest in Jharkhand undertook a march while carrying the national flag.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments