வாடகைக்கு கொண்டுவரப்பட்ட மாணவர்கள்: அபிஜீத் தீப்கேவின் அடுத்த இலக்கு யார்?
பள்ளிக்கு வாடகைக்கு கொண்டுவரப்பட்ட மாணவர்கள் பற்றி அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் அடுத்த இலக்கு மகாராஷ்டிர கல்வித் துறை அமைச்சர்தான் என்கின்றன தகவல்கள்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் அபிஜீத்.
வியாழனன்று ஜில்லா பரிசத் பள்ளிக்குச் சென்ற, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே ஆய்வு செய்த போது, பள்ளியில் இருந்த மாணவர்கள் பெயர்கள் அங்குள்ள வருகைப் பதிவில் இடம்பெறவில்லை.
Advertisement
Advertisement
தன்னுடைய ஆய்வு நடவடிக்கை குறித்து அறிந்து அந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளியிலிருந்து வாடகைக்குக் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறார்கள்.
மும்பையிலிருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் குடிநீர் வசதியோ, கழிப்பறை வசதியோ இல்லை. இருந்த ஒரு அசுத்தமான கழிப்பறையும் தான் பள்ளிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
வெளியிலிருந்து பிள்ளைகளை அழைத்து வந்த, தங்கள் பள்ளி மாணவர்கள் போல கணக்குக் காட்ட முயன்றுள்ளது பள்ளி நிர்வாகம். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முயலாமல், இவ்வாறு பொய் கணக்குக் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன?
அது மட்டுமல்ல, தான் வருவதை அறிந்துகொண்ட பிறகு, வேறு எங்கோ இருந்து புதிதாக மதிய உணவு வந்தது. ஏற்கனவே இருந்த மதிய உணவு பரிமாறப்படவில்லை.
பள்ளி வளாகத்தில் பல இடங்களில் மதுபாட்டில்கள் இருக்கின்றன. இது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்றும் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.