22 இந்தியர்களுடன் இருந்த 2 சரக்குக் கப்பல்களைக் கடத்திய கடல் கொள்ளையர்கள்!
யேமன், சோமாலியா கடற்பகுதிகளில் 22 இந்தியர்களுடன் இருந்த சரக்குக் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தியது குறித்து...
யேமன், சோமாலியா கடற்பகுதிகளில் 22 இந்தியர்களுடன் இருந்த சரக்குக் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமன் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஏடென் வளைகுடா அருகே எரித்திரியா நாட்டின் கொடியுடன் எம்டி சிபு 1 என்ற எண்ணெய் சரக்குக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது, அதனை ஆயுதமேந்திய கடற்கொள்ளையர் கும்பல் சிறைப் பிடித்து, கடத்திச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட இந்தக் கப்பலில் 16 இந்தியர்கள், சிரியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் தலா ஒருவரும், மாலுமி ஒருவரும் இருந்துள்ளார். கடத்தப்பட்ட கப்பலில் இருக்கும் 20 பேரும் பாதுகாப்பாகவே இருப்பதாக கடல்சார் நிர்வாக இயக்குநரகம் தெரிவித்தபோதிலும், அவர்களின் நிலை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
முன்னதாக, திங்கள்கிழமையில் (ஆக. 17) சோமாலியா நாட்டின் புன்ட்லாந்து கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடி ஏந்தியிருந்த சரக்குக் கப்பலையும் கடற்கொள்ளையர்கள் கடத்தியிருந்தனர். இந்தக் கப்பலிலும் இந்தியர்கள் 6 பேர் உள்பட 10 பேர் இருந்தனர்.
துருக்கிய ராணுவப் பயிற்சி மையத்திற்கு ஆயுதங்களையும், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்களையும் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் இந்தக் கப்பலை, நுகால் கடற்கரையை நோக்கி கடற்கொள்ளையர்கள் கொண்டு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட இந்தக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களின் நிலை குறித்து துருக்கிய அதிகாரிகள் தகவல் ஏதும் இன்னும் தெரிவிக்கவில்லை.
Two vessels with 22 Indians on board hijacked by pirates near Yemen, Somalia
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.