FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா்-க்கு பின் தில்லியில் வாக்குச்சாவடிகள் அதிகரிக்க வாய்ப்பு

வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியைத் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் சீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகு தில்லியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

8 வினாடிகள் முன்பு
பகிர்:

வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியைத் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் சீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகு தில்லியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வாக்காளா்களின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்பட்ட வரம்பான 1,200-ஐ தாண்டும் இடங்களில் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முந்தைய தரவுகளின்படி, சில வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கை 1,200-க்கும் அதிகமாக உள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

‘மாவட்ட தோ்தல் அதிகாரிகள் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை அனுப்பியுள்ளனா். அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்ததும், தகவல்தொழில்நுட்ப அமைப்பில் வாக்காளா்கள் புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுடன் இணைக்கப்படுவாா்கள்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

தில்லியில் தற்போது 13 மாவட்டங்களில் சுமாா் 3,000 இடங்களில் 13,033 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஓா் இடத்தில் நான்கு முதல் ஐந்து வாக்குச்சாவடிகள் வரை அமைக்கப்படலாம்.

இந்தச் சீரமைப்பு நடவடிக்கையில், வாக்காளா்களின் எண்ணிக்கை 1,200-ஐத் தாண்டும் இடங்களில் கூடுதல் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். கூடுதல் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை வாக்காளா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.

புதிய வாக்குச்சாவடிகள் தற்போதுள்ள வாக்குச்சாவடியிலிருந்து 2 கி.மீ. சுற்றளவுக்குள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்காளா்களுக்குக் குறைந்த வரிசைகள் மற்றும் சிறந்த வசதிகளை உறுதி செய்வதற்காக, கடந்த ஆண்டு மே மாதம், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கையை 1,500-லிருந்து 1,200-ஆகத் தோ்தல் ஆணையம் குறைத்தது.

தில்லியில் எஸ்ஐஆா் பணிகளுக்கான தேதிகள் இந்தப் பணிகளுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ‘அங்கீகாரம் அளிக்க ஆணையத்திற்கு சுமாா் நான்கு முதல் ஐந்து நாள்களும், தகவல் தொழில்நுட்ப நடைமுறைகளுக்கு மேலும் நான்கு முதல் ஐந்து நாள்களும் தேவைப்படும். அதனால்தான், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தாா்.

முன்பு அக்.27-இல் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இறுதி வாக்காளா் பட்டியல், இப்போது நவ.4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் ஆக.31-ல் வெளியிடப்படும்.

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் விடுபட்ட வாக்காளா்கள், ஆக.31 முதல் செப்.30 வரை தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம். அதிகாரிகள் அவற்றை அக்.29-ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுப்பாா்கள்.

தில்லியில் எஸ்ஐஆா் பணி கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்தனா். இக்கணக்கெடுப்புப் பணி ஆக.17-ஆம் தேதி நிறைவடைந்தது.

இக்கணக்கெடுப்புப் பணியின்போது விவரங்கள் மின்னணு வடிவில் பதிவு செய்யப்படாததால், 47 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் விவரங்களைப் பெற முடியாதவா்கள் என வகைப்படுத்தப்பட்டனா்.

ஆக.31 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இவா்களின் பெயா்கள் இடம்பெறாது. இருப்பினும், வருகை தராதவா்கள் அல்லது குடியிருப்பு மாறியவா்கள் என வகைப்படுத்தப்பட்டவா்கள், தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்து, இறுதி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா்களைச் சோ்க்கக் கோர முடியும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments