பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்
பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி..
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (IISc) எம்டெக் பயின்று வந்த 22 வயது மாணவர் கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோபால் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மறுநாள் இது பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அறையிலிருந்து மாணவரின் தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், அவருக்கு சில சொந்த பிரச்னை இருந்ததாகவும், அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இது குறித்து இரங்கல் வெளியிட்ட கல்வி நிறுவனம், மாணவர்களின் பாதுகாப்பான இடமாக கல்வி நிறுவனம் செயல்படுவதை உறுதி செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி பிடெக் படித்து வந்த 19 வயது மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 15 நாள்களில் இரண்டாவது தற்கொலை சம்பவம் இது என்று கூறப்படுகறிது.
ஆனால், இவ்விரண்டுமே சொந்த பிரச்னைகள் காரணமாக நிகழ்ந்திருப்பதாகக் காவல்துறை கூறுகிறது. எனினும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.