பணி ஓய்வுக்குப் பின் எப்போது பிஎஃப் வட்டி நிறுத்தப்படும்? விளக்கம்
பணி ஓய்வுக்குப் பின் எப்போது பிஎஃப் வட்டி நிறுத்தப்படும் என்பது பற்றிய தகவல்
ஒருவர் பணி ஓய்வுக்குப் பிறகு அவரது பிஎஃப் தொகைக்கு வட்டி வழங்குவது எதுநாள்வரை நீடிக்கும் என்பது பற்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.
அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.
ஒரு தொழிலாளர் அல்லது ஊழியர் வேலையை விட்டு விலகும்போது அல்லது ஓய்வுபெறும்போது, அவரது வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிற்கான வட்டி வருவாய் உடனடியாக நிறுத்தப்படுவதில்லை. அதாவது, வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைப்பது என்பது அந்த ஊழியரின் வயது மற்றும் அந்தக் கணக்கு செயலற்றதாக மாறும்போதுதான் நிகழ்கிறது.
Advertisement
Advertisement
அதாவது, ஓய்வுபெற்றுவிட்டோம் அல்லது பணியிலிருந்து விலகிவிட்டோம், இனி பிஎஃப் கணக்கில் பணத்தை எடுத்துவிடலாம் என்று கருதுவோருக்கு இது ஒரு புதிய தகவலாக அமைந்துள்ளது.
அண்மையில் ஊழியர் சேமநிதி அமைப்பு வெளியிட்ட விளக்கத்தில், 55 வயது அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, 58 வயதை அடைந்தபிறகே இபிஎஃப் கணக்கு செயலிழந்ததாகும். அதன்பிறகுதான், வட்டி ஈட்டுவது நிறுத்தப்படும். அதுபோல 55 வயதுக்கு முன்பு ஓய்வுபெற்றாலும், 58 வயதை வரை தொடர்ந்து வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
எனவே, 58 வயதுக்கு முன்பு, எப்போது பணியிலிருந்து விலகினால், வேலையளிப்பவரிடமிருந்து புதிய பங்களிப்புத் தொகைதான் கிடைக்காதே தவிர, கணக்கு செயல்பாட்டில் இருக்கும். அதில் இருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
When does PF interest stop accruing after retirement? explanation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.