தில்லி: ஐபோன் இஎம்ஐ கட்ட முடியாமல் யமுனையில் குதித்த நபர் பத்திரமாக மீட்பு!
ஐபோன் இஎம்ஐ கட்ட முடியாத மன அழுத்தத்தில் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர் பற்றி...
தில்லியில் ஐபோன் இஎம்ஐ கட்ட முடியாத மன அழுத்தத்தில் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு தில்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள போலா காட் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆற்றில் ஒருவர் தத்தளிப்பதைக் கண்ட ரோந்து போலீஸார், உடனடியாக வெள்ளத் தடுப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் படகு மூலம் ஆற்றில் தவித்துக் கொண்டிருந்தவரைப் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட நபர் ஓக்லா சஞ்சய் காலனியைச் சேர்ந்த தீபக் குமார் (30). நடன ஆசிரியரான இவர், தோட்டப் பணிகளையும் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால், தான் வாங்கிய ஐபோனுக்கான இஎம்ஐ(கடன்களுக்கான மாதத் தவணை) தொகையை செலுத்த முடியாமல் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
Advertisement
Advertisement
இதன் காரணமாகவே அவர் ஆற்றில் குதித்ததாகத் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட தீபக் குமாருக்குக் போலீஸார் உரிய ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் அவரது மனைவி மற்றும் மைத்துனரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
A 30-year-old dance teacher allegedly jumped into the Yamuna in southeast Delhi after being unable to pay the instalments on an iPhone due to a drop in his income, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.