கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்!
கொல்கத்தாவில் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி...
கொல்கத்தாவில் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 புதிய கார்கள் எரிந்து நாசமான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் பங்க்ரா பகுதியில் உள்ள கார் ஷோரூமில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 22 புதிய கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் 8 கார்கள் பலத்த சேதமடைந்தன. இருப்பினும், இதில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
அதிகாலை 5 மணியளவில் அப்பகுதி மக்கள் முதலில் தீயைக் கண்டனர். உடனடியாக அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
Advertisement
Advertisement
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஷோரூம் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்திய பின்னரே, அங்கு போதுமான தீயணைப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தனவா இல்லையா என்பது தெரியவரும் என்று தீயணைப்புத் துறை அதிகாரி கூறினார்.
மேற்கு வங்கத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இரண்டு பெரிய ஹோட்டல் தீ விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் மொத்தம் 18 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
A major fire broke out early Monday morning at a car showroom in Bankra near the Netaji Subhas Chandra Bose International Airport on the northern outskirts of Kolkata, in which 22 new cars were gutted, and eight others badly damaged.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.