கொல்கத்தாவில் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பலி; பலர் காயம்
கொல்கத்தாவில் ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பலி; பலர் காயமடைந்துள்ளது குறித்து...
கொல்கத்தா (மேற்கு வங்கம்): மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட ஒன்பது பேர் பலியாகினர், ஆறு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மின் கசிவு காரணமாக ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள ஹோட்டலில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. தகவலை அடுத்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணியாளர்கள் ஹோட்டலில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் ஏற்பட்ட பெரும் புகையினால் தீயணைப்பு வீரர்களால் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், ஹோட்டலுக்குள் சிக்கிய பலரை பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும், இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தின்போது பலரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்களால் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனது.
மேலும், தீ விபத்தில் பலியானவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குளிர்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட ஹோட்டல் தீ விபத்தில் 8 பேர் பலி
கடந்த திங்கள்கிழமை, பிர்பும் மாவட்டத்தில் உள்ள தாராபித் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
தாராபித் கோயிலின் புனித குளத்திற்கு அருகில் இருக்கும் ஐந்து தளங்களைக் கொண்ட இந்த ஹோட்டலின் தரைதளத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் ஏணிகளைப் பயன்படுத்தி 28 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்ட்டனர், மேலும் காயமடைந்த 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் மேகாலயாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மேகாலயாவின் ஷிப் பாரி பகனாரா மற்றும் சவுத் கார்ஹில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
At least nine people were killed and several others injured after a fire broke out at a hotel on Mirza Ghalib Street in central Kolkata in the early hours of Wednesday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.