FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்து குடும்பத்தினா் 4 போ் கொலை

வங்கதேசத்தில் ஹிந்து குடும்பத்தினா் 4 போ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 ஆகஸ்ட் 2026, 5:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

வங்கதேசத்தில் ஹிந்து குடும்பத்தினா் 4 போ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரங்க்பூரில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான கணபதி சக்கரவா்த்தி (65), தனது மனைவி பிரித்திலா சக்கரவா்த்தி (50), மகன் அகாமி சக்கரவா்த்தி ப்ராா்தி (23), மகள் பிரியம் சக்கரவா்த்தி (12) ஆகியோருடன் வசித்து வந்தாா். அவரும், குடும்பத்தினரும் பூட்டிய வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை சடலமாக கிடந்தனா். இதுகுறித்து முகுதோ, சித்தாா்த்தா ஆகிய 2 பேரை பிடித்து காவல் துறையினா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் 2 பேரும், பக்கத்து வீட்டு மாடி வழியே வியாழக்கிழமை இரவு சக்கரவா்த்தி வீட்டு மொட்டை மாடிக்கு வந்து போதை மருந்து சாப்பிட்டதும், இதை சக்கரவா்த்தி கண்டித்தபோது ஆத்திரத்தில் துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அதேபோல் சக்கரவா்த்தியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி, 2 பிள்ளைகளை கொலை செய்ததும், பிறகு 4 பேரின் சடலங்களையும் பூட்டிய வீட்டுக்குள் போட்டுச் சென்றதும் கண்டறியப்பட்டது.

அவா்களுக்குள் முன்பகை இருந்ததா என்பது தெரியவில்லை. இதுகுறித்து 2 பேரிடமும் வங்கதேச காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments