அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!
பாஜகவை அரசியல் களத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றும் வரை அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டேன் என மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து சந்நியாசம் பெறப்போவதில்லை என்றும் பாஜகவை அரசியல் களத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றும் வரை தனது போராட்டம் தொடரும் என்றும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி இன்று ஃபேஸ்புக் நேரலையில் பேசினார்.
அதில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் மற்றொரு முயற்சியே. அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் இது செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
மக்கள் தொகை கணக்கெடுப்புப் படிவங்களில் கையெழுத்திடும்போதும், தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்போதும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கவனமாக இல்லாவிட்டால் தனிப்பட்ட சேமிப்புத் தொகை பறிபோகும் அபாயம் உள்ளது.
பெண்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலருக்கும் தகுதி அடிப்படையில் பாஜக சாக்குபோக்கு சொல்லி பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றது.
பெண்களைப் பொருளாதார ரீதியாக சுயசார்பு கொண்டவர்களாக மாற்ற நாங்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், பாஜக நிதி வழங்குவதில் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறது” என்றார்.
சமீபத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்பினரிடையே மோதல்கள் ஏற்பட்ட நிலையில், அங்கு வன்முறையை பாஜக துண்டிவிட்டதாக மமதா குற்றம் சாட்டினார்.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் பற்றிப் பேசிய மமதா, “இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காகத் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “நான் நிச்சயமாக அரசியலில் இருந்து சந்நியாசம் பெறமாட்டேன். பாஜகவை அரசியல் களத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றும் வரை என்னுடைய போராட்டம் தொடரும்” என்றும் அவர் கூறினார்.
West Bengal Chief Minister Mamata Banerjee has stated that she will not retire from politics until the BJP is completely removed from the political arena.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.