FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜார்க்கண்ட் போராட்டம்: எக்ஸ் பயனரின் தகவல்களைக் கோரும் காவல்துறை!

ஜார்க்கண்ட் போராட்டம் குறித்து தவறான தகவல்களப் பரப்பியதாகக் கூறப்படும் நபரின் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு எக்ஸ் நிறுவனத்துக்கு காவல்துறை சம்மன்...

ஜார்க்கண்ட் மாணவர்கள் பேரணி நடத்தியபோது... - கோப்புப் படம்
பகிர்:

ஜார்க்கண்ட் போராட்டம் குறித்து தவறான தகவல்களப் பரப்பியதாகக் கூறப்படும் நபரின் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு எக்ஸ் நிறுவனத்துக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜார்க்கக்ண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டிஎஸ்ஆர் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை நிறுத்திவைப்பதாக ஆக. 20 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள் மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 21) போராடினர். போராட்டக்களத்தில் கூடிய மாணவர்கள், முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர்.

இதைத் தடுக்க முயன்ற காவலர்களுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெயர் குறிப்பிட்ட 28 நபர்கள் மீதும், பெயர் குறிப்பிடப்படாத 900 நபர்கள் மீதும் மற்றும் தனித்தனியாக மூன்று முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து, ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற போராட்டம் குறித்து தவறான மற்றும் புனையப்பட்ட புகைப்படங்களையும், விடியோக்களையும் பரப்பியதாகக் கூறப்படும் JPSCreformanch என்ற கணக்கைப் பயன்படுத்தும் பயனரின் தகவல்களைக் கேட்டு, ஜார்க்கண்ட் காவல்துறை எக்ஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அந்த சம்மனில் JPSCreformanch என்ற பயனரின் உண்மையான பெயர், முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை கோரப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பயனர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு ஊழியருக்குப் பொய்யானத் தகவல்களை அளித்தல், அவதூறு பரப்புதல் மற்றும் புண்படுத்தும் கருத்துகளை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The police issued a summons to X on Monday (Aug. 24), seeking the personal details of an individual alleged to have spread misinformation regarding the Jharkhand protests.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments