FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் 2 வாரங்களில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் 2 வாரங்களில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் - கோப்புப்படம்
பகிர்:

தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியா் தருண் தேஜ்பால் இரண்டு வாரங்களில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கோவாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, ஹோட்டல் மின் தூக்கியில் தனது இளம் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தருண் தேஜ்பால் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்த மும்பை உயர் நீதிமன்றம், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,21,000 அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

Advertisement

Advertisement

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக இரண்டு வாரங்கள் சரணடைவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தருண் தேஜ்பால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், வழக்கின் விசாரணைத் தொடங்கும் வரை சரணடைவதிலிருந்து விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அலோக் ஆராதே, அடுத்த 2 வாரங்களுக்குள் தருண் தேஜ்பால் சரணடைய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வருகின்ற செப்டம்பர் 22 அல்லது அதற்கு முன்னதாக சரணடைதல் சான்றிதழை தருண் தேஜ்பால் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த தேதியில் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Supreme Court orders journalist Tarun Tejpal to surrender within two weeks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments