FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதி

கர்நாடகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்று முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளதைப் பற்றி...

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்.
பகிர்:

கர்நாடகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்று முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டது.

குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

Advertisement

Advertisement

சில நாள்களுக்கு முன்னதாக, ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாளில் தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, வந்தே மாதரம் முழுவதுமாகப் பாடப்பட்டதால் சோனியா காந்தி, கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி மற்றும் கார்கே ஆகியோர் ஆவேசமாகப் பேசும் விடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

வழக்கமாக வந்தே மாதரம் பாடலில் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில், முழுமையாகப் பாடல் ஒலிப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகத்தில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட மாட்டாது என்றும், இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்றும் கட்சியின் நிலைப்பாட்டிற்குத் தாம் துணை நிற்பதாக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், “நான் எங்கள் கட்சியின் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறேன். கட்சியின் முடிவுகளுக்குத் துணை நிற்பேன்.

என்னுடைய அனுமதியின்றியோ அல்லது ஆளுநர் அலுவலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்தே மாதரம் பாடல் முழுமையாக ஒலிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், வந்தே மாதரத்தின் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும்” என்றார்.

முன்னதாக, கடந்த ஜூன் 3 ஆம் தேதி கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொண்ட போது, ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், வந்தே மாதரம் முதலாவதாக முழுமையாக ஒலிப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், அதன்பின் கடைசியாக கர்நாடகத்தின் மாநில வாழ்த்துப் பாடலான “ஜய பாரத ஜனனிய தனுஜாதே..” கடைசியாக பாடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

summary

DK Shivakumar said he will stick to Congress's decision to sing only the first two stanzas of Vande Mataram at government and public programmes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments